திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 29-ல் ஆட்டோ - டூவிலர் வண்டிகள் பொது ஏலம்!!! காவல்துறை அறிவிப்பு!!!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில்‌ மதுவிலக்கு வழக்குகளில்‌
சம்மந்தப்பட்டு பல்வேறு காவல்‌ நிலையங்களில்‌ பறிமுதல்!!!
வாகனங்கள்‌ ...

பொது ஏல அறிவிப்பு!!!

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்‌ 1937 பிரிவு 14ன்‌ படி அரசுக்கு
பறிமுதல்‌ செய்யப்பட்ட மதுவிலக்கு வழக்குகளில்‌ சம்பந்தப்பட்டு
ஸ்பிளண்டர்‌ -4, ஸ்பிளண்டர்‌ பிளஸ்‌ -1, புரோ-2, பஜாஜ்‌ டிஸ்கவர்‌ -4, பல்சர்‌
-2, காலிபர்‌ -2, பஜாஜ்‌ 27 -2, ஷைன்‌-1, யூனிகான்‌- 1, ஹோன்டோ
லீவா-1, ஹீரோ எக்ஸ்புரோ -1, பிளஸ்சர்‌ -1, பேசன்‌ புரோ -1, மேஸ்டிரோ -
1, டி.வி.எஸ்‌ எக்ஸ்‌ சூப்பர்‌ -12, பேசன்‌ பிளஸ்‌ -1, டி.வி.எஸ்‌ -1, ஸ்கூட்டி
பெப்‌ -1, சுபிட்டர்‌ -1, ஸ்போர்ட்‌ -2, டி.வி.எஸ்‌ சேம்ப்‌ -1, டி.வி.எஸ்‌ விக்டர்‌ -1,
ஆக்ஸாஸ்‌ -1, ஆட்டோ -2 ஆக மொத்தம்‌ -47 வாகனங்கள்‌ வருகிற
29.08.2019-ம்‌ தேதி காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்‌
கண்காணிப்பாளர்‌ அலுவலகம்‌ முன்பாக பகிரங்க ஏலத்தில்‌
விடப்படவுள்ளது.

 ஏலம்‌ எடுக்க விரும்புவோர்‌ தகுந்த முன்பணம்‌ செலுத்தி
ஏலத்தில்‌ கலந்து கொள்ளலாம்‌. ஏலம்‌ விடப்படும்‌ வாகனங்கள்‌ மற்றும்‌
விபரங்களுக்கு கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌, மதுவிலக்கு அமலாக்கபிரிவு, துத்துக்குடி மாவட்டம்‌ (தொலைபேசி எண்‌. 0461 - 2340300)
அவர்களை தொடர்பு கொண்டு விபரம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. மேற்படி
வாகனங்களை மாவட்ட காவல்‌ அலுவலக மைதானத்தில்‌ வைத்து
அனுமதி பெற்று அலுவலக நேரத்தில்‌ பார்வையிடலாம்‌.

திருவைகுண்டம்‌
காவல்நிலையத்தில்‌ ஒரு ஆட்டோவும்‌, குளத்தூர்‌ காவல்நிலையத்தில்‌ ஒரு



ஆட்டோவும்‌ உள்ளது என்றும்‌ இதன்மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக