வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

30,00,0007“ மதிப்புள்ள நில மோசடி செய்த வழக்கில்‌ ஒருவர்‌ கைது!!

30,00,0007“ மதிப்புள்ள நில மோசடி செய்த வழக்கில்‌ ஒருவர்‌ கைது!!

புதுச்சேரி, லாஸ்பேட்‌, நாவற்குளம்‌ மெயின்ரோட்டைச்‌ சேர்ந்த
கிருஷ்ணமூர்த்தி மகன்‌ வெங்கட்ராமன்‌ (51) என்பவருக்கு பாத்தியப்பட்ட 9 ஏக்கர்‌
8 செண்ட்‌ நிலம்‌ ஒட்டப்பிடாரம்‌ தாலுகா புதூர்‌ பாண்டியாபுரத்தில்‌ உள்ளது.

மேற்படி நிலத்தை எதிரிகள்‌ தமிழ்செல்வமணி, யோவான்‌, மாசிலாமணி,
தீபக்‌ தயாளன்‌, வெயில்முத்து, கண்ணன்‌, முருகன்‌, விஜயபாண்டி மைக்கேல்ராஜ்‌
மற்றும்‌ சிலர்‌ கூட்டுச்சதி செய்து வெங்கட்ராமன்‌ சொத்தை அபகரிக்க வேண்டும்‌
என்ற எண்ணத்தில்‌ ஒரு எதிரியை வைத்து ஆள்மாறாட்டம்‌ வெங்கட்ராமன்‌ என்ற
பெயரில்‌ ஆள்மாறாட்டம்‌ செய்து, போலி ஆவணங்கள்‌ தயாரித்து
தமிழ்செல்வமணி என்பவருக்கு போலியாக பொது அதிகார ஆவணம்‌ பதிவு
செய்து கொடுத்துள்ளார்‌. இந்த போலி ஆவணத்தில்‌ மாசிலாமணி மற்றும்‌ தீபக்‌
தயாளன்‌ ஆகியோர்‌ சாட்சி கையொப்பமிட்டுள்ளனர்‌.

போலி பொது அதிகாரம்‌ பெற்ற தமிழ்செல்வமணி என்பவர்‌, அந்த போலி
பொது அதிகாரத்தை உண்மைபோன்று பயன்படுத்தி யோவான்‌ என்பவருக்கு
கிரையம்‌ செய்து கொடுத்துள்ளார்‌. இந்தக்‌ கிரைய ஆவணத்தில்‌ வெயில்முத்து
மற்றும்‌ கண்ணன்‌ ஆகியோர்‌ சாட்சி கையொப்பமிட்டு வாதி வெங்கட்ராமனின்‌
ரூபாய்‌ 30,00,000 மதிப்புள்ள சொத்தை மோசடி செய்துள்ளனர்‌.

இது குறித்து தூத்துக்குடி நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு காவல்‌
ஆய்வாளர்‌ செல்வி. அருள்‌ ரோஸ்‌ சிங்‌, உதவி ஆய்வாளர்‌ திரு. வைகுண்டம்‌
மற்றும்‌ போலீசார்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி தாலுகா,
திப்பம்பட்டியைச்சேர்ந்த பழனிச்சாமி மகன்‌ தமிழ்செல்வமணியை (43) இன்று
(30.08.2019) கைது செய்துள்ளனர்‌.

இவ்வழக்கில்‌ யோவான்‌, மாசிலாமணி, முருகன்‌, விஜயபாண்டி,
மைக்கேல்ராஜ்‌ ஆகியோர்‌ ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்னர்‌. இந்த வழக்கில்‌



சம்மந்தப்பட்ட மேலும்‌ சிலரை போலீசார்‌ தேடி வருகின்றனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக