வியாழன், 19 நவம்பர், 2026

மகளிர் உரிமைத்தொகை விவகாரம் த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்

மகளிர் உரிமைத்தொகை விவகாரம் த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்

தூத்துக்குடி: நவ

 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்க நினைப்பதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழகப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் கருத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு மாதா மாதம் 14 மற்றும் 15-ம் தேதிகளில் இத்தொகை தவறாமல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

ஆனால், நடப்பு நவம்பர் மாதத்திற்கான உரிமைத்தொகை இதுநாள்வரை பல பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, இத்தொகை பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்ற விவரம் தெரியுமா?


'நான் முதலமைச்சரானால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும்' எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையைக்கூடத் தகுதியுள்ள பெண்களுக்குத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? 

geetha Jeevan thoothukudileaks


கடந்த அக்டோபர் 24-ம் தேதி விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், விரைவில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக, தற்போது வழங்கப்பட்டு வரும் தொகையையும் நிறுத்த முனைவது ஏன்?


எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கேள்விகளுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காக்கும் முதலமைச்சர், இந்த விவகாரத்திலாவது உரிய விளக்கத்தை அளிப்பாரா? மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது நல்லாட்சிக்கான அடையாளமல்ல; 


அது மக்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். எனவே, தாமதமின்றி உடனடியாக அனைத்துத் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகையை விடுவிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக