திங்கள், 9 நவம்பர், 2026

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மீது கவுன்சிலர்கள் புலம்பல்!!!

குழந்தைகள் தின விழாவிலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லையா? தூத்துக்குடி கவுன்சிலர்கள் புலம்பல்!!!!



தூத்துக்குடி, நவ.10:


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 11 முதல் 14-ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.



 இந்நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வழக்காடு மன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 



நவம்பர் 11-ம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளும், நவம்பர் 14-ம் தேதி முத்துநகர் கடற்கரைப் பூங்காவில் பல்வேறு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளன.


இந்நிகழ்ச்சிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மாநகராட்சி ஆணையர் பெயரும், சுகாதார அலுவலர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.


தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ள நிலையில், விழா நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களின் பெயர்கள்கூட அழைப்பிதழில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்.....

, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளது. 


ஆனால்?  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கவுன்சிலர்கள் கூறுகின்றனர் 


கடந்த ஆறு மாதங்களாக மாநகராட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை. அந்தந்த வார்டுகளில் உள்ள குறைகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிவித்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.


குழந்தைகள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில்கூட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை இடம்பெறச் செய்யாமல் விழா நடத்துகின்றனர் 

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக