வியாழன், 15 அக்டோபர், 2026

தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளியில் ‘ஹலோ பிரிட்டானிக்கா’ கல்வித் திட்டம் தொடக்க விழா!மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த புதிய முயற்சி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல் துணைத் தலைவர் அசோக் குமார் பங்கேற்பு!

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளியில் ‘ஹலோ பிரிட்டானிக்கா’ கல்வித் திட்டம் தொடக்க விழா!மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த புதிய முயற்சி – தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல் துணைத் தலைவர் அசோக் குமார் பங்கேற்பு!

தூத்துக்குடி, அக்.16:
தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஹலோ பிரிட்டானிக்கா’ (Hello Britannica) என்ற புதிய கல்வித் திட்டத்தின் தொடக்க விழா இன்று (அக்டோபர் 16) காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஹலோ பிரிட்டானிக்கா கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முதல் பள்ளி என்ற சிறப்புடன் கே.வி.எஸ். பள்ளி இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

மாணவர்களின் வாசித்தல், எழுதுதல், கேட்டல் மற்றும் பேசுதல் ஆகிய நான்கு அடிப்படை ஆங்கில மொழித்திறன்களையும் மேம்படுத்துவதுடன், நவீன கற்றல் முறைகள் மூலம் அவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இப்பள்ளியில் 3 வகுப்பு இருந்து 9 வகுப்பு வரை குழந்தைகள் பயிற்சியில் பயன்பெறுகின்றன.



இவ்விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் செயல் துணைத் தலைவர் பி. ஆர். அசோக் குமார் (P. R. Ashok Kumar - EVP, TMB) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
thoothukudileaks
கம்யூட்டர் அறை ரிப்பன் 🎀 வெட்டி திறப்பு 



மேலும், இந்நிகழ்ச்சியில் CSR அரவிந்த் குமார் (CSR Aravind Kumar), கே.வி.எஸ். பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிடமணி (K.S.S.A. Dhiravidamani - President, KVS School), செயலாளர் டி. ஆர். தமிழரசு (T.R. Tamilarasu - Secretary, KVS), முதல்வர் மெலிண்டா தாமஸ் (Melinda Thomas - Principal, KVS) மற்றும் துணை முதல்வர் கிறிஸ்டோபெல் மோதே (Chrisobel Mothe - Vice Principal, KVS) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கே.வி.எஸ். பள்ளி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முயற்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக