Tamil Nadu updates,
photo news by Arunan Reporter
அதிமுக 55வது ஆண்டு தொடக்க விழா தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு தனித்தனி அணியாக மாலை அணிவித்த அதிமுகவினர்!
சண்முகநாதன், செல்லப்பாண்டியன் தலைமையில் தனித்தனியாகக் கொண்டாட்டம் – அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு!
தூத்துக்குடி, அக். 17:
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கருணாநிதிக்கு எதிராக 1972ஆம் ஆண்டு தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தனது 55வது ஆண்டு தொடக்க விழாவை இன்று கொண்டாடியது.
இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். இருப்பினும், கட்சி நிர்வாகிகள் தனித்தனி அணிகளாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்வு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
![]() |
| மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் |
![]() |
| தூத்துக்குடி மாநகர் செயலாளர் சில செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர்.... |
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக தூத்துக்குடி மாநகரச் செயலாளரும் மாநில வர்த்தக அணிச் செயலாளருமான செல்லப்பாண்டியன் தலைமையில் கட்சியினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்றத் துணைச் செயலாளர் ஹென்றி, கழக அமைப்புச் செயலாளர்கள் பெருமாள்சாமி, சின்னத்துரை, மாவட்டப் பொருளாளர் சேவியர், பகுதிச் செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், சுடலைமணி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா, இலட்சுமணன், துணைச் செயலாளர் மிக்கேல், ஏசாதுரை, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, தமிழரசி, சாந்தி, ராஜேஸ்வரி, சண்முகத்தாய், ஜோதிமணி, நாகூர் பிச்சை, சகாயராஜ், ஆசைத்தம்பி, போக்குவரத்து கல்விக்குமார், இலட்சுமணன், ராஜ்குமார், சுகந்தன், எட்வின் பாண்டியன், சந்தனராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மற்றொரு அணியாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்து, அதே வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் லட்டுகள் வழங்கி கட்சியின் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடினர்.
ஒரே கட்சியின் 55வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் முக்கிய நிர்வாகிகள் இரு தனித்தனி அணிகளாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுகவின் நிறுவன நாளில்கூட நிர்வாகிகள் ஒன்றிணைந்து நிகழ்ச்சியை நடத்தாமல் தனித்தனியாகக் கொண்டாடியது, தூத்துக்குடி அதிமுகவினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக