Tamil Nadu updates
photo news by Arunan journalist
தூத்துக்குடியில் பாஜக சார்பில் “சேவா ஜோதி” பிரச்சாரப் பேரணி...
தூத்துக்குடி, அக். 7:
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் “சேவா ஜோதி” பிரச்சாரப் பேரணி இன்று நடைபெற்றது.
![]() |
| சேவா ஜோதி ஏந்திய படி பேரணி.. |
இதையொட்டி காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னலில் இருந்து “சேவா ஜோதி” பிரச்சாரப் பேரணி புறப்பட்டது.
பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கன், தெற்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பேரணி நடைபெற்றது.
பேரணி தூத்துக்குடியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காலை 11.30 மணியளவில் டூவிபுரம் 5-வது தெருவில் நிறைவடைந்தது.
![]() |
| செய்தியாளர் சந்திப்பில் |
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு “சேவா ஜோதி” பிரச்சாரப் பேரணி மற்றும் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக