ஞாயிறு, 4 அக்டோபர், 2026

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்து அச்சுறுத்தல் சமூக வலைதளங்களில் காணொளி பதிவிட்ட நபர்கள் கைது இளைஞர்கள் மனம் திருந்தி கண்ணீர் வீடியோ பார்க்க

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்து அச்சுறுத்தல்

சமூக வலைதளங்களில் காணொளி பதிவிட்ட நபர்கள் கைது !!!

தூத்துக்குடி, அக்டோபர் 4:

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்ததுடன், அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மனம் திருந்தி ய இளைஞர்கள் 
கண்ணீர் வீடியோ 

கைது செய்யப்பட்ட நபர்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், இதுதொடர்பான விழிப்புணர்வு காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.


பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை – பொதுமக்கள் பாதுகாப்பே முன்னுரிமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக