Tamil Nadu updates,
by Arunan Reporter
தூத்துக்குடி ஆக. 3:
தூத்துக்குடியில் அதிமுக ஆட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 16 உயிர்களை சுட்டு கொன்று தீர்த்தது.
தூத்துக்குடி பொதுமக்களுக்கு என்றும் தீரா ரண வலியை உண்டு பண்ணியது.
தமிழக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை கண்டனங்களை தெரிவித்திருந்தது.
இதனால் அப்போது இருந்த
அதிமுக ஆட்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடினார் ?
அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் சிறப்பு சட்ட ம் கொண்டு வந்து நிரந்தர மாக மூடுவோம் என்றார்.
ஆனால்?
முதல்வர் ஸ்டாலின் கடந்த 5ஆண்டு களில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக நிறுத்திட சிறப்பு சட்டம் எதுவும் கொண்டு வரவில்லை..
போதாக்குறைக்கு அப்புறப்படுத்த உத்தரவு வந்தும் அதையும் பெயரளவில் செய்து கண்டு கொள்ளவே இல்லை
அதே போல் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை படி காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் மீது அதன் படி நடவடிக்கை குற்றவாளிகள் தண்டிக்க படவில்லை????
மீண்டும்..... ஸ்டெர்லைட் ஆலை தீவிரம் !!!
தற்போது ....
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை வேதாந்தா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
வேதாந்தா நிறுவனம் முன் வைத்துள்ள ..புதிய ‘பசுமைத் தாமிரம்’ திட்டம் ..தொடர்பாக, இன்னும் சில மாதங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காத்திருப்பு!!!
இந்த திட்டத்திற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்தால், ஆலையை புதுப்பித்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ..சுமார் ரூ.2,400 கோடி முதலீடு செய்யும் வகையில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக 8 முதல் 9 மாதங்களுக்குள் ஆலையை மீண்டும் இயக்கி, ஆண்டுக்கு திட்டமிட்ட அளவிலான தாமிர உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி பொதுமக்கள் எதிர்ப்பு சமாளிக்க திட்டம்!!!
மேலும், புதிய திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பின் காரணமாக, மறுசுழற்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் ஆலையை இயக்குவதற்கான வழிமுறைகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வேதாந்தா நிறுவனத்தின் இந்த முயற்சி, உச்சநீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக