செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை கண்டறிய புதிய வசதி: Google நிறுவனம் அறிவிப்பு!!!!!
தூத்துக்குடி: அக் 8
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் போலி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ கோப்புகளை எளிதாகக் கண்டறியும் 'SynthID Detection Tool' என்ற புதிய தொழில் நுட்பத்தை Google நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது.
தற்போது AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், எது உண்மையான படம், எது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிவது சவாலாக மாறியுள்ளது. இதற்கு தீர்வாக கூகுள் நிறுவனம் இப்புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் synthid.com என்ற இணையதளத்திற்குச் சென்று, தாங்கள் சரிபார்க்க விரும்பும் புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளைப் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்யலாம்.
இந்தப் பரிசோதனையின் மூலம், சம்பந்தப்பட்ட கோப்பானது Google, OpenAI, Nvidia அல்லது Kakao ஆகிய முன்னணி AI நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலிச் செய்திகள் மற்றும் தவறானத் தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், இணையப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த 'SynthID' கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
#SynthID | #Google | #AI | #ThoothukudiLeaks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக