தூத்துக்குடி அக் 10
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை ஜாதிய அடிப்படையில் ஒரு சிலர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு செயல்படுவதாகவும் நாடார் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தென் மாவட்டத்தில் இல்லாததால் தங்களது குறைகளை சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
எனவே ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை, நாடார் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காவிட்டால் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் திரும்பும் என எச்சரிக்கை.
இது பற்றிய செய்தியாவது :-
தூத்துக்குடியில் நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் சிலுவை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நடந்து முடிந்த இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் சிறந்த நிர்வாகத்தை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வரை பாராட்டுகிறோம் என தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தமிழகத்தில் நாடார் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக ஆகியிருக்கும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஜாதி மத வேறுபாடு இன்றி செயல்பட்டு வருகிறார்.
ஆனால் அவரை சுற்றி இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவரை ஒரு ஜாதி வட்டத்திற்குள் அடைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார் சமுதாய மக்களின் அரசியல் முடிந்துவிட்டது.
இனி எங்கள் சமுதாய கொடி தான் பறக்கும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது இனிமேல் அனைத்து பதவிகளும் எங்கள் சமுதாயத்திற்கு தான் என கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பலருக்கு பதவி இல்லாமல் உள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததால் எங்கள் குறைகளை சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே விகிதாசார அடிப்படையில் கூடுதலாக அமைச்சர் பதவி வழங்க வேண்டும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று உள்ள தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நாடார் சமுதாயம் புறக்கணிக்கபடுவது போல் தெரிகிறது எனவே இதற்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராகவும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராகவும் திரும்பும் சூழ்நிலை ஏற்படும் எனவே இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் உடனடியாக நாடார் இயக்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக