ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

தூத்துக்குடி ராஜலெட்சுமி மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம். திரளான பொதுமக்கள் பங்கேற்பு!

தூத்துக்குடியில் ராஜலட்சுமி மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: திரளான பொதுமக்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி:செப் 27

தூத்துக்குடி குறிஞ்சிநகரில் அமைந்துள்ள ராஜலெட்சுமி மருத்துவமனையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.


இம்முகாமிற்கு டாக்டர் ராஜலெட்சுமி தலைமை வகித்தார். மருத்துவர்கள் பிரபு அலாய், பழனி ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

thoothukudileaks


முகாமில் மகப்பேறு மற்றும் பெண்கள் நலப்பிரிவின் கீழ் கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை கட்டிகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை பிரச்சனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை ஆகியவற்றுக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks


மேலும், சிறுநீரகவியல் தொடர்பான சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சனைகள், சிறுநீர் கசிவு, புரோஸ்டேட் பிரச்சினைகள் மற்றும் ஆண்மை குறைபாடு ஆகிய குறைபாடுகளுக்கும், எலும்பு மற்றும் மூட்டு நலப்பிரிவில் முழங்கால் வலி, மூட்டு வலி, மணிக்கட்டு வலி, முதுகு வலி, குதிகால் வலி, ஆர்த்ரிட்டீஸ் மற்றும் ஆஸ்டியோ போராசிஸ் போன்ற பாதிப்புகளுக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

thoothukudileaks


இதுமட்டுமின்றி, முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், யூரியா மற்றும் கிரியாட்டீன் ஆகிய பரிசோதனைகள் இலவசமாகச் செய்து தரப்பட்டன. இம்முகாமில் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக