செவ்வாய், 21 ஜூலை, 2026

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?"பாலகுமாரா!!தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?மார்க்கண்டேயனின் 'மெகா ஸ்கெட்ச்' பலித்ததா?!

தூத்துக்குடி லீக்ஸ் ஸ்மார்ட் ஸ்டோரி

செய்தி தகவல் ரோஜா அருணன் செய்தியாளர்

 21-7-2026

"இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?"

பாலகுமாரா!!!


மார்க்கண்டேயனின் 'மெகா ஸ்கெட்ச்' பலித்ததா? வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை குறிவைத்த அரசியல் நகர்வு... அனிதா ராதாகிருஷ்ணனின் 'கிரேட் எஸ்கேப்'... தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?


தூத்துக்குடி அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் ஒரே விஷயம் – விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன். பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய ஒரு பேச்சு, அதைத் தொடர்ந்து நடந்த காவல்துறை நடவடிக்கை, கைது, நீதிமன்ற காவல், அதற்குப் பிறகு மாநில திமுக தலைவர்களின் தொடர் கண்டன அறிக்கைகள்... இவை அனைத்தும் சாதாரண சம்பவங்களா? அல்லது இதன் பின்னால் பெரிய அரசியல் கணக்கு இருக்கிறதா? என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் சுற்றி வருகிறது.


"கடந்த ஒரு மாதமாக போட்ட பிளான் சக்சஸ் ஆகிவிட்டதாம்..." பில்டிங் ஸ்ட்ராங்  ஃபேஸ் மட்டம் வீக்காகி 15 நாட்கள் சிறைக்கு போக வேண்டியதாக ரொம்ப அசிங்கமாச்சு குமாரு என கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் தகவல்களே இந்த ஸ்மார்ட் ஸ்டோரியின் மையமாக உள்ளன.





தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவில் இரண்டு அதிகார மையங்கள் !!


தூத்துக்குடி மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.


வடக்கு மாவட்டம் – தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம்.


தெற்கு மாவட்டம் – திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம்.


வடக்கு மாவட்ட செயலாளராக கீதா ஜீவன் தொடர்கிறார். தெற்கு மாவட்ட செயலாளராக  திருச்செந்தூர் எம் எல் ஏ அனிதா ராதாகிருஷ்ணன்  உள்ளார்.


ஆனால் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கீதா ஜீவன் தோல்வியடைந்த நிலையில், விளாத்திகுளம் மார்க்கண்டேயனும், கோவில்பட்டி கருணாநிதியும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.


---தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டத்தில்  கீதா ஜீவன் தூத்துக்குடியில் தோற்று விட்டார் ஆனாலும் வடக்கு மாவட்ட செயலாளர் ஆக தொடர்வது விளாத்திகுளம் வெற்றி பெற்ற மார்க்கண்டேயன் எம்எல்ஏ க்கு கடந்த ஒரு மாதமாக உறுத்தியது 


"நான் எம்.எல்.ஏ... இன்னும் மாவட்ட செயலாளர் ஏன் இல்லை?"


திராவிடக் கட்சிகளில் மாவட்ட செயலாளர் பதவி என்பது வெறும் கட்சிப் பொறுப்பு அல்ல. மாவட்டம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அதிகார மையம். தேர்தல் வேட்பாளர் தேர்வு முதல் நிர்வாக நியமனம் வரை செல்வாக்கு செலுத்தும் பதவி.

அதனால் திராவிட கட்சிகள் அதிமுக திமுக மாவட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏ அமைச்சர் ஆக இருப்பவர்களுக்கே வழங்கி வரும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.


அதனால்தான், "தேர்தலில் வெற்றி பெற்றது நான்... அப்படியிருக்க வடக்கு மாவட்ட செயலாளர் பதவி இன்னும் வேறு ஒருவரிடம் ஏன்?" என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாக மார்க்கண்டேயனை உறுத்தியதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திருச்சி வழி ஆலோசனை!!!

இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், "தலைவர், உதயநிதி, கனிமொழி வரை கவனிக்கும் அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவானால் வாய்ப்பு உருவாகும்" என்ற ஆலோசனையும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


---


கோவில்பட்டி கூட்டம்... திருப்புமுனை மேடை?


கடந்த சனிக்கிழமை இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கோவில்பட்டி கருணாநிதி எம்.எல்.ஏ. தனது உரையை அமைதியாக முடித்தார்.


ஆனால் அடுத்து பேசிய மார்க்கண்டேயனின் பேச்சு அரசியல் சூட்டை கிளப்பியது.

 தமிழக முதல்வர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படும் அந்தப் பேச்சு, சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலானது. உளவுத்துறை வரை அந்த வீடியோ சென்றதாகவும், அதன்பின் காவல்துறை நடவடிக்கை வேகமெடுத்ததாகவும் கூறப்படுகிறது.



"வரமாட்டேன்... கைது செய்ய சபாநாயகர் அனுமதி காட்டுங்கள்!"


திங்கட்கிழமை அதிகாலை காவல்துறையினர் மார்க்கண்டேயனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல அவரது இல்லத்துக்குச் சென்றனர்.


முதலில் "நான் எம்.எல்.ஏ.; கைது செய்ய சபாநாயகர் அனுமதி காட்டுங்கள். வரமாட்டேன்" என்று வாக்குவாதம் செய்ததாகவும், பின்னர் காவல்துறை வாகனத்தில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கி???

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊடகங்கள் திரண்டபோது, அவர் போலீசார் துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகக் கூறி சத்தமிட்ட சம்பவமும் அன்றைய பரபரப்பை அதிகரித்தது.

thoothukudileaks


---நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொண்டாரா இல்லை யா தெரியல விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் கைதின் போது முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் திமுக தொண்டர்கள் மகளிர் அணியினர் எல்லாம் திரட்டி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீசார் உடன் மல்லுக்கட்டும் மறியலில் ஈடுபட்டு கைது செய்து விடுவிக்க பட்டார் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன்.


"இன்றிரவே வெளியே வந்துவிடலாம்..." ஹேப்பி யாக என்ற கணக்கு உடைந்ததா?


நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு முன்ஜாமீன் கிடைத்து அன்றே வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்ததாக  கூறுகின்றனர்.

ஏனென்றால் கடந்த மாதம் இதே போல் முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் போலீஸ் கைது செய்து நள்ளிரவில் நீதிபதி இடம் ஆஜர் படுத்தி முன் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்?

பூமராங்!!!

அதே போல் தானும் எம் எல் ஏ என்பதால்?முன் ஜாமீன் கிடைக்கும் so அன்றிரவே ஹேப்பியாக வெளியே வந்து விடலாம் என சீன்  போட பூமராங் ஆகிடுச்சு 

ஆனால்? விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழக்கில் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்றக் காவல் உத்தரவிட்டதும் அந்தக் கணக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நொந்தார்.

thoothukudileaks


---


அதன்பிறகு நடந்தது என்ன?


இதுதான் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சம்.


மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.


இதன் மூலம் மாநில அளவில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் பெயர் பேசப்படும் சூழல் உருவானது. "இப்போது மாவட்ட செயலாளர் பதவிக்கான வாய்ப்பு அதிகரித்திருக்கலாம்" என்ற பேச்சும் கட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


---


அனிதா ராதாகிருஷ்ணன்... 'கிரேட் எஸ்கேப்' ஏன்?


இந்த பரபரப்பில் இன்னொரு பெயரும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது – அனிதா ராதாகிருஷ்ணன்.


காவல்துறை நடவடிக்கையின்போது நேரடி மோதலைத் தவிர்த்து அமைதியாக விலகியதாகவும், அரசியல் ரீதியாக தேவையற்ற சிக்கலைத் தவிர்க்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உடன் நெருக்கமாக பழக்கத்தில் இருக்கிறார்.


 மயக்கம் வந்துடுச்சு என கார் ல சென்று விட்டார்  இதையே சிலர் "கிரேட் எஸ்கேப்" என்று வர்ணிக்கின்றனர்.

thoothukudileaks


---


இறுதியில்...


மார்க்கண்டேயனின் கைது அவருக்கு அரசியல் அனுதாபத்தையும் திமுக மேலிடம் அளவிலான கவனத்தையும் பெற்றுத் தந்ததா? வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான வாய்ப்பை அதிகரித்ததா? அல்லது இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா?


இந்தக் கேள்விகளுக்கான பதில் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் 

ஆனால் ஒன்று மட்டும் உறுதி... வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் ஓரம் கட்ட பட்டால் தூத்துக்குடி யில் திமுக காணாமல் போக வாய்ப்பு அதிகம் உள்ளது.


தூத்துக்குடி திமுகவில் அமைதியாக இருந்த அரசியல் களம், இப்போது மீண்டும் கொதிக்கத் தொடங்கியுள்ளது..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக