புதன், 8 ஜூலை, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தூத்துக்குடி, ஜூலை 9:

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் பணியாற்ற உள்ள களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஜூலை 9 முதல் 11 வரை மற்றும் ஜூலை 13 முதல் 15 வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

thoothukudileaks


மொத்தம் 376 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, களப்பணி பயிற்றுநர்கள் மூலம் முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சிகள் வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிர் கல்லூரி, பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்று வருகின்றன.

பயிற்சியின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடைமுறைகள், தரவுகள் சேகரிக்கும் முறை, தகவல்களின் துல்லியம் மற்றும் களப்பணியின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருமான சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக