திங்கள், 11 மே, 2026

முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்பு கொண்டாட்டம் இனிப்பு வழங்கி மகிழ்ந்த தூத்துக்குடி வழக்கறிஞர் அணி

தூத்துக்குடி மே 11

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்து நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர் அணியினர், மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் ஜேசுதாஸ் மற்றும் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. 

thoothukudileaks


இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்களான முனீஸ்வரமூர்த்தி, என்.எஸ். செந்தில்குமார், எம். செந்தூர் பாண்டியன், ஜே. சுமிதா, ஏ. சோமன புனிதா, நிஷாந்த், ரேமண்ட், சிவராஜ் மற்றும் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக