வியாழன், 16 ஏப்ரல், 2026

தூத்துக்குடியில் SDR பேபி கேர் புதிய கிளை திறப்பு – நடிகர் சாந்தனு பாக்யராஜ் பங்கேற்பு, ரசிகர்கள் திரண்டனர்

Tamil Nadu updates

தூத்துக்குடி: ஏப்ரல் 16

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் “SDR பேபி கேர்” நிறுவனத்தின் புதிய கிளை பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் ஏவிஎம் மஹால் அருகில் அமைந்துள்ள இக்கிளை இன்று காலை 11 மணியளவில் தொடங்கப்பட்டது.

thoothukudileaks


இந்த புதிய கிளையை திரைப்பட நடிகர் சாந்தனு பாக்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு அந்த பகுதியில் பெரும் திரளான மக்கள் கூடினர். குறிப்பாக, ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






மேலும், நடிகர் சாந்தனுவை காண ரசிகர்கள் அப்பகுதியில் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.


வீடியோ பார்க்க..

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் நிறுவனர் பொன் சீலன் சிறப்பாக செய்திருந்தார். குழந்தைகளுக்கான அனைத்து வகையான விளையாட்டு உபகரணங்களும், தேவையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இக்கிளை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக