தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி ஏப்ரல் 4
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம்:
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமியிடம் சுந்தர்ராஜ் தனது மனுவை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், லட்சுமண பெருமாள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
வேட்பு மனுதாக்கலையொட்டி, அப்பகுதியில் கூட்டணி கட்சியினரின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக