ஞாயிறு, 8 மார்ச், 2026

தூத்துக்குடியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக நிர்வாகிகள் கூண்டோடு விலகல் சின்னம்மா சசிகலா முன்னிலையில் எஸ்.ஏசாதுரை தலைமையில் கழகத்தில் இணைவு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி : மார்ச் 9

தூத்துக்குடியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூண்டோடு விலகி, தியாகத் தலைவி சின்னம்மா சசிகலா தலைமையில் எஸ்.ஏசாதுரை முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.


thoothukudileaks


முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக செயல்பட்டு வரும் எஸ்.ஏசாதுரை , தியாகத் தலைவி சின்னம்மா சசிகலா  தனது தலைமையிலான கழகத்தில் இணைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கூண்டோடு விலகி, சின்னம்மா சசிகலா தலைமையை ஏற்று எஸ்.ஏசாதுரை முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றி சின்னம்மா சசிகலா தலைமையில் செயல்பட உறுதி எடுத்ததாக தெரிவித்தனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக