செவ்வாய், 24 மார்ச், 2026

2026 தேர்தல் அதிமுக 23 முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

25.03.2026 Tamil Nadu updates,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

thoothukudileaks


வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில், மொத்தம் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆட்சிமன்றக் குழு ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முக்கிய தலைவர்களில் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனுபவமிக்க நிர்வாகிகளுக்கும் இந்த பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் வலுவான அமைப்பை கருத்தில் கொண்டு இந்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

thoothukudileaks



“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற ஜெயலலிதா அவர்களின் கோஷத்தை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலில் வெற்றி பெற உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) தலைமைக் கழக அறிவிப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல்



வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்:


 எடப்பாடி (86): எடப்பாடி K. பழனிசாமி


 வேப்பனஹள்ளி (54): கே.பி. முனுசாமி


 திண்டுக்கல் (132):  திண்டுக்கல் C. சீனிவாசன்


 நத்தம் (131): நத்தம் இரா. விசுவநாதன்


தொண்டாமுத்தூர் (119): . S.P. வேலுமணி


 குமாரபாளையம் (97): பி. தங்கமணி


 ராயபுரம் (17): D. ஜெயக்குமார்


 மைலம் (71): C.Ve. சண்முகம்


 மதுரை மேற்கு (194): செல்லூர் K. ராஜூ


 பாலக்கோடு (57):. K.P. அன்பழகன்


  நன்னிலம் (169):  R. காமராஜ்


 வேதாரண்யம் (165): . O.S. மணியன்


  விராலிமலை (179): டாக்டர் C. விஜயபாஸ்கர்


 கோவில்பட்டி (218):  கடம்பூர் C. ராஜூ


 திருமங்கலம் (196):  R.B. உதயகுமார்


 சிவகாசி (205):  K.T. ராஜேந்திரபாலாஜி


 மதுரவாயல் (7):. பா. பெஞ்சமின்


  கலசபாக்கம் (65): அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி


  திருப்பரங்குன்றம் (195): . V.V. ராஜன் செல்லப்பா


 பவானி (104): திரு. K.C. கருப்பணன்


  ஜோலார்ப்பேட்டை (49): . K.C. வீரமணி


 கரூர் (135): . M.R. விஜயபாஸ்கர்


 அரியலூர் (149):  தாமரை S. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக