Tamil Nadu updates 20-2-2026
தூத்துக்குடி, பிப்ரவரி 20 -
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சிறப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் IPS தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம்" என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழ் மொழியின் பெருமையையும், அதன் தொன்மையையும் பேணுவதற்கான உறுதியை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
(நமது நிருபர்)
செய்தி வீடியோவில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக