தூத்துக்குடி லீக்ஸ் | அரசியல் செய்தி
photo news by sekar
தூத்துக்குடி:பெ17
தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி புறநகர் மாவட்டம் (ஓட்டப்பிடாரம்) மாவட்ட துணைச் செயலாளர் அ.வசந்தி ஜார்ஜ், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்த மனு தாக்கல் நிகழ்வு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. .
மனு தாக்கல் செய்த பின்னர் அ.வசந்தி ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்டநாள் நிலவி வரும் குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில் மக்கள் சேவைக்காக நான் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டு தமிழக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்க அயராது பாடுபடுவேன்,” என உறுதியளித்தார்.
இந்த அறிவிப்பு தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளில் விருப்ப மனு தாக்கல் செய்யும் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக