திங்கள், 2 பிப்ரவரி, 2026

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் பரபரப்பு

Tamil Nadu updates,3-2-2026

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, பிப்ரவரி 3:

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மைய முடிவின் படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியில் உள்ள ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் சார்பில் இன்று காலை 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் – ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்  தோழர் கனகவேல்  தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக அரசின் கவனத்திற்கு ஊழியர்களின் கோரிக்கைகளை கொண்டு செல்லும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காவல்துறை தரப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks


இந்த மறியல் போராட்டத்தில்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெக வீரபாண்டியன்,

ஓய்வூதிய பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் எபனேசர் டேனியல்,

தன்ராஜ், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மற்றும் 60-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து, மினிபஸ் மூலம் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக