தூத்துக்குடி, ஜனவரி 30 :
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் தலைமை வகித்தார். ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டோசர் இயக்க ஓட்டுநர்கள் நியமனம் நீட்டிப்பு:
சனிதாரி பங்களிப்பு நிதியின் கீழ் வாங்கப்பட்ட இரண்டு டோசர் வாகனங்களை இயக்குவதற்காக 26.08.2025 முதல் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட இரண்டு ஹெவி டியூட்டி ஓட்டுநர்களின் பணிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்க மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது. இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.902 வீதம் ஊதியம் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
ஒப்பந்த வைப்புத்தொகை திருப்பி வழங்கல்:
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முடிக்கப்பட்ட பணிகளுக்கான காலாவதியான வைப்புத்தொகைகளை உரிய ஒப்பந்ததாரர்களுக்கு திருப்பி வழங்க மாநகராட்சி அனுமதி அளித்தது.
அதன்படி,
திரு. ஆர். தங்கராஜ் –
பாலாஜி நகர் BT சாலை பணிக்கு ரூ.73,826
சந்தோஷ் நகர் BT சாலை பணிக்கு ரூ.69,766
M/s. Power Communications –
பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கான மொத்தம் ரூ.65,546
நில தானம் ஏற்றுக்கொள்ளல்:
கூளஸ்கால் கிராமத்தில் 12,490 சதுர அடி பரப்பளவில் திரு. டி.எஸ். சேகர் ராஜவேல் அவர்களின் லேஅவுட் திட்டத்திற்கான சாலை மற்றும் பொது ஓய்வு இடத்தை மாநகராட்சிக்கு தானமாக வழங்குவதற்கான பத்திரங்களை ஏற்றுக்கொள்ள மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது.
கடை ஏலம் தொடர்பான முடிவுகள்:
மாநகராட்சியின் கீழ் உள்ள பல்வேறு கடைகளுக்கான ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தெற்கு கடற்கரை சாலை கியோஸ்க் கடை – மாத வாடகை ரூ.7,000
சிதம்பரநகர் வளாக கடை – மாத வாடகை ரூ.22,600
என்ற அடிப்படையில் ஏலம் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனை வளாகங்களில் உள்ள கேன்டீன் இடங்களுக்கான ஏல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக