ஞாயிறு, 4 ஜனவரி, 2026

திமுக தேர்தல் அறிக்கை மொபைல் செயலி தொடக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் முழு விவரம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி


சென்னை,  டிச 4

தமிழ்நாட்டை வளமான மாநிலமாக மாற்ற பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளை நேரடியாகப் பெறும் நோக்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கை மொபைல் செயலியை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில், திமுக தேர்தல் அறிக்கை குழுவின் மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் எண், தொலைபேசி எண் மற்றும் சமூக வலைதள கணக்குகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். “நம் தமிழ்நாட்டை வளமாக்க உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்; அவற்றைச் செய்து தரத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது” எனும் முழக்கத்துடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர அழைப்பு விடுக்கப்பட்டது.


பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை

🌐 tnmanifesto.ai என்ற இணையதளம்,

💬 9384001724 என்ற வாட்ஸ்ஆப் எண்,

📲 08069446900 என்ற தொலைபேசி எண்,

📧 dmkmanifesto2026@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரி,

 @DMKManifesto26 என்ற சமூக வலைதள கணக்கு

மூலமாக தெரிவிக்கலாம். மேலும் http://www.dmk.in/ta/manifesto2026 என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சி மூலம் மக்கள் பங்கேற்புடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், திராவிட மாடல் நல்லாட்சி தொடர்ந்து தமிழ்நாடு வெற்றி பெறும் என்றும் திமுக தலைமை நம்பிக்கை தெரிவித்தது.

#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக