வியாழன், 22 ஜனவரி, 2026

தூத்துக்குடி விடுதலைப் போராட்ட வீரர் தேர்மாறனின் 218வது நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி: டிசம்பர் 21

தூத்துக்குடி விடுதலைப் போராட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்களின் புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் வழங்கி உதவிய வீரர் தேர்மாறனின் 218வது நினைவேந்தல் கூட்டம், அவரது கல்லறை வளாகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு வில்சன் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் சேசைய்யா வில்லவராயர் தலைமை வகித்தார்.

thoothukudileaks

 



கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் பகவத்சிங், அன்னை பரதர் நலச்சங்கத்தின் தலைவர் சேவியர் வாஸ், பேராசிரியை பாத்திமாபாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் டிலெக்டா ரவி, திரேஸ்புரம் ராஜாபோஸ்ரீகன், ஜோபாய் கோமஸ், டெரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். அன்னை பரதர் நலச்சங்கத்தின் பொருளாளர் காஸ்ட்ரோ தொகுத்து வழங்கினார்.

அப்போது சேசைய்யா வில்லவராயர், தமிழக வெற்றிக் கழகத்தின் அஜிதா ஆக்னலின் களப்பணிகளைப் பாராட்டிப் பேசினார். மேலும், தேர்மாறனின் பிறந்த நாளை ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்து, அடுத்தாண்டு முதல் ஒரே நாளில் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து த.வெ.க. அஜிதா ஆக்னல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் சசிகுமார், பெல்லா, ரோக் பரதர், நெய்தல் அண்டோ, பெனோ, துறைவன் பாண்டியன், சேவியர் சில்வா, எழு கடல்துறை மைந்தர்கள் சார்பில் எல்சியாஸ், பரத குல எழுச்சிப் போராளிகள் சார்பில் பிரசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


முடிவில் தேர்மாறன் நற்பணி மன்றத்தின் தலைவர் எட்வின் பாண்டியன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்மாறன் நற்பணி மன்றத்தாரும், தேர்மாறன் மணிமண்டபம் அமைப்புக் குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக