திங்கள், 15 டிசம்பர், 2025

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மேலும் வாட்ஸ்அப், டெலிகிராம் பயன் படுத்துபவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை போலி பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ் செய்தி 

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு – தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தல்📌 

தூத்துக்குடி, டிச.15 :

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக போலி பங்குச் சந்தை முதலீடு தொடர்பான சைபர் மோசடிகள் கணிசமாக அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

thoothukudileaks


 சமூக ஊடகங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மேலும் வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்கள் மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களை குறிவைத்து மோசடிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த மோசடிகளில் ஈடுபடுபவர்கள், பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் போலியான இணையதளங்கள், செயலிகள், லாப விவரங்கள், ட்ரேடிங் ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காட்டி, முதலில் சிறிய தொகையை முதலீடு செய்ய வைப்பதாகவும், பின்னர் அதிக லாபம் கிடைக்கும் என கூறி தொடர்ந்து பணம் செலுத்த வற்புறுத்தி, இறுதியில் தொடர்பை துண்டித்து விடுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது .

மேலும், அதிக லாபம் – குறைந்த ஆபத்து என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், முதலீடு செய்யும் முன் சம்பந்தப்பட்ட நிறுவனம் **செபி (SEBI)**யில் பதிவு செய்யப்பட்டதா என்பதை அவசியம் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இதுபோன்ற சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் இழப்புகளை குறைத்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 24x7 ஹெல்ப்லைன் / வாட்ஸ்அப் எண் : 95141 44100 மூலம் தகவல்கள் பெறலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது .


👉 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக