தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி| இந்த ஆண்டு இதுவரை 140 பேர் கைது – காவல்துறையின் கடும் நடவடிக்கை
தூத்துக்குடி, டிசம்பர் 14:
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
![]() |
| ஹரி கிருஷ்ணன் |
![]() |
| ரவிகுமார் |
கடந்த 15.11.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் அரிகிருஷ்ணன் (54) மற்றும் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் ரவிகுமார் (53) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், உத்தரவின் பேரில், இன்று (14.12.2025) சிப்காட் காவல் நிலைய போலீசார் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குற்றச்செயல்கள், குறிப்பாக போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 140 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— தூத்துக்குடி லீக்ஸ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக