புதன், 29 அக்டோபர், 2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நாய்கள், மாடுகள் தொல்லை – மாநகராட்சி நடவடிக்கை

தூத்துக்குடி: அக்:- 29

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக நாய்கள் மற்றும் மாடுகள் சுற்றித் திரிவது பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தது.

பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் மத்தியில் நாய்கள் சண்டையிடுதல், பேருந்து வரும் வழியில் மாடுகள் குறுக்கு நெடுக்காக நிற்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றதால் ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் 28.10.2025 நே ற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் இன்று (29.10.2025) புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். 


thoothukudileaks
இன்று 
புகைப்படம் (பேருந்து நிலையம் உள்ளே மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் காட்சி) 

thoothukudileaks
நேற்று 

thoothukudileaks
நேற்று 



🐕 நாய்கள் மீது நடவடிக்கை!!!

இதில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து பாதுகாப்பாக மாற்றினர். 


மேலும் இப்பகுதியில், மாடுகள் திரியும் நிலையைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வே ண்டும் என்கிறார்கள்.

thoothukudileaks

thoothukudileaks

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக