திங்கள், 15 செப்டம்பர், 2025

ஸ்டெர்லைட் குறித்து வாட்ஸ் அப் ல பரவி வரும் வைரல் பதிவு

 


தூத்துக்குடி மக்கள் கவனத்திற்கு!

ஸ்டெர்லைட் ஆலையினை மக்கள் போராட்டத்தின் மூலம் முடக்கச் செய்த பின், “5000 பேர் வேலை இழந்துவிட்டனர், 

மக்கள் கஷ்டப்படுகின்றனர்” என்ற பெயரில் சிலர் கார்ப்பரேட் க்கு எடுபிடி யாக சப்போர்ட் பண்ணி கலெக்டரிடம் மனு கொடுத்தும், சமூக வலைத்தளங்களிலும் போலியான பிரசாரம் செய்தும் வருகின்றனர்.

ஆனால் உண்மை நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்தவர்களில் வெறும் 15% பேர் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் 35% பேர் வெளிமாநிலத்தவர்கள். எனவே, வேலை வாய்ப்பு இழப்பு தூத்துக்குடி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தியதாகச் சொல்ல முடியாது.

மாறாக, துப்பாக்கி சூடு ஸ்டெர்லைட்  முடக்கப்படுவதற்கு முன்பே மத்திய – மாநில அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், வரிச் சுமைகள் (GST), அடக்குமுறைகள் காரணமாக பல்வேறு ஆலைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர். அதன் பட்டியல்:

  • விவி மினரல் – 50,000 பேர் வேலை இழப்பு
  • Beach Mineral Pvt Ltd (BMC) – 20,000 பேர் வேலை இழப்பு
  • மதரா கோட்ஸ் மில் – 2,000 பேரில் தற்போது 60 பேர் மட்டும் வேலை
  • தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் – 2,000 பேர் வேலை இழப்பு
  • மவுன்டன் ஸ்பின்னிங் மில், புதுக்கோட்டை – 2,000 பேர் வேலை இழப்பு
  • அரசன் ஸ்பின்னிங் மில்ஸ் (எப்போதும் வென்றான், மடத்தூர், அல்லிகுளம்) – 3,500 பேர் வேலை இழப்பு
  • அரசன் டெக்ஸ்டைல்ஸ் மில், லயன்ஸ் டவுன் – 1,000 பேர் வேலை இழப்பு
  • ஃபாணா இண்டர்நேஷனல், வாகைக்குளம் – 700 பேர் வேலை இழப்பு

மேலும் சிறு தொழில்கள், சிறிய நிறுவனங்கள் பலவும் வரிச் சுமைகள், பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டு, சுமார் 1.5 லட்சம் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் முடக்கப்பட்டதால் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் பிரசாரம் முழுவதும் தவறானதும், வழிமோசமாகும் என்பதே பொதுமக்களின் கருத்து.

“ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் போராடி மூடச் செய்தது தூத்துக்குடி மக்களின் பெருமை; அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த நம் உறவுகளின் தியாகத்திற்கு மரியாதை செலுத்துவோம்” 

என்று வாட்ஸ் அப் சமூக வலைத்தளங்களில் தற்போது ரொம்ப வைரலாக பரவி வருகிறது.

– 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக