ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் தூத்துக்குடி நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மலர்மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்



தூத்துக்குடி மாவட்டம் : 15.09.2025

தமிழக முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சார்பாக, தமிழ்நாடு மாநகராட்சி - நகராட்சி ஒய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் இரா. மாடசாமி தலைமையில் அண்ணா சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு (லட்டு) வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் இரா. மாடசாமி  செயலாளர் சேவியர்,நகராட்சி ஒய்வு பெற்ற மேனேஜர் ராமசாமி துனைசெயலாளர் ஜெயசீலன், இணைச் செயலாளர் சண்முகவேல், பொருளாளர் எம். ராஜ்,

video 

காவல்துறை ஒய்வு பெற்ற சங்க மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் , துனை செயலாளர் நயினார், செயற்குழு உறுப்பினர் வள்ளி, மற்றும் சங்க உறுப்பினர்கள் சுப்புலட்சுமி,குருவம்மாள், பஞ்ச வர்ணம்,மூக்கம்மாள், லட்சுமி,ஞானம், சுப்பையா, தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்கம் மாவட்ட தலைவி சங்கீதா ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



குறிப்பாக, தமிழ்நாட்டின் நகராட்சி ஊழியர்களுக்கு ஒய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை என்பதும் குறிப்பிடத்தக்கது.


👉 புகைப்பட விளக்கம் 

📸 தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 117 வது பிறந்த நாள்  விழா 

தமிழ்நாடு மாநகராட்சி - நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் இரா. மாடசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் இணைந்து அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய நிகழ்வு.

---






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக