தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
கரூர்:- ஆகஸ்ட் 27
கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் வீதியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் பக்தர்களுக்கு அன்பளிப்பாக (இலவசமாக) வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் பக்தர்களின் இல்லங்களுக்கும் சென்று குடிசைப்பகுதி மக்களிடம் சங்கத்தின் பொறுப்பாளர்கள் களிமண் சிலைகளை வழங்கினர்.
விநாயகர் சிலைகளை பெற்று கொண்ட பக்தர்கள் சங்கத்தின் முயற்சியை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகள் சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆலோசனைப்படி, மாவட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், கருணாநிதி, மதியழகன், வெங்கடேசன், மஹா விஷ்ணு, ரவி, செந்தில், சரவணன், சக்தி ஆகியோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
👉 பதிவு நாள் 27-8-2025



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக