புதன், 20 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடியில் குற்றவாளியை துரத்தி பிடித்த போக்குவரத்து காவலர் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி மாவட்டம் : 20.08.2025

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய எதிரியை துரத்தி பிடித்து கைது செய்த போக்குவரத்துப் பிரிவு காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.



கடந்த 18.08.2025 அன்று இரவு, தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர்  ஞானமுத்து  குரூஸ்பர்னாந்த் சிலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 


அப்போது அவ்வழியாக வந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் சோதனையில் சிக்கியபோது தப்பிச் செல்ல முயன்றார்.



உடனடியாக செயல்பட்ட தலைமை காவலர் ஞானமுத்து, குற்றவாளியை துரத்தி பிடித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


இச்சிறப்பான பணிக்காக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப நேற்று (19.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து தலைமை காவலர் ஞானமுத்துவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


👉 புகைப்படம் மாதிரி ஒவியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக