கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில்கள் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று (16-7-2025)கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிராபிக்ஸ் மாடல் புகைப்படம் இது
## முதல்வர் ஸ்டாலின் !!!
"பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், ..?
பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே?" என்று கேள்வி எழுப்பிய பிரசாத், தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்.
## திராவிட மாடல் அரசின் மருத்துவ கட்டமைப்பு தோல்வி
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக்காட்டும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். "பச்சிளம் குழந்தைகளை கூட பாதுகாக்க வழியற்றதாக திராவிட மாடல் அரசு இயங்குவதை நினைத்து வெட்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
## சென்னையிலும் குழந்தைகள் பாதிப்பு
சில நாட்களுக்கு முன்பு வடசென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் மருத்துவ விதிகளை மீறி நடந்த கட்டிட மேம்பாட்டுப் பணியில் குழந்தைகள் பாதிக்கப்பட்டதையும் அவர் நினைவுப்படுத்தினார்.
## தமிழகம் முழுவதும் முழு ஆய்வு கோரிக்கை
தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரசாத், தமிழகம் முழுதும் உள்ள அரசு தாய் சேய் நல மகப்பேறு மருத்துவமனைகளில் முழு ஆய்வு மேற்கொண்டு, குழந்தை பெற்ற தாய்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் முழு மருத்துவ பாதுகாப்பை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
## சுகாதாரத் துறை அமைச்சர் மீது கடுமையான விமர்சனம்
"உங்களுடன் ஸ்டாலின், ஒரணியில் தமிழகம் என தேர்தல் அரசியலுக்காக, மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் ஓட்டு பிச்சைக்காக தெருத்தெருவாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செல்வதால் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது" என்று கடுமையாக விமர்சித்தார்.
## "sorry மா" என்று சொல்லி தப்பிக்க முடியாது
முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடம், குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களிடம் "சாரிமா" என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று மக்கள் நலத்தை பற்றி கவலை கொள்ளாமல் காலம் தாழ்த்துவது ஆபத்தானது என்று எச்சரித்தார்.
## போர்க்கால அடிப்படையில் மாற்றங்கள் கோரிக்கை
திமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளிப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய பிரசாத், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மருத்துவ சுகாதாரத்துறையில் போர்க்கால அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
## "திராவிட மாடல் விளம்பர அரசு"
திராவிட மாடல் விளம்பர அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை நோயாளிகள் படும் துன்பங்களை மறந்தும் மறைத்தும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திமுக அரசின் பெருமைகளாக பொய்களை பேசி வருவது கண்டனத்துக்குரியது என்று கூறினார்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக