சனி, 26 ஜூலை, 2025

அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேல் ஆதங்கம்!!

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 


📰 முப்பெரும் விழாவுடன் வணிகவியல் பள்ளிகள் சங்க கூட்டம் விழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேல்  ஆதங்கம் தெரிவித்தனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், 26.07.2025 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு பனிமய மாதா ஆலயம் வளாகத்தில் அமைந்துள்ள ஓசானம் டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் சிறப்பாக நடைபெற்றது.

வணிக வியல் தூத்துக்குடி


இக்கூட்டத்திற்கு தலைவர்  இன்பராஜ் வரவேற்புரை ஆற்றி, உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். கூட்டத்தின் போது, மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் கொண்டாடப்பட்டன. அவை:

  • கர்மவீரர் முன்னாள் முதல்வர் காமராசரின் பிறந்த நாள்
  • தெய்வத்திரு புரவலர்  டி.ஜி.எஸ். அவர்களின் 92வது பிறந்த நாள்
  • சங்கத்தின் 56வது ஆண்டுவிழா

முப்பெரும் விழாவாக அமைந்த இந்நிகழ்வில், திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், "தமிழக அரசாணை எண் 187" ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 


கணனி பயன்பாட்டில் 'தமிழ்99' விசைப்பலகையை தவிர்த்து, பழைய தட்டச்சு விசைப்பலகையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 

"இது தட்டச்சு தொழிலை பாதுகாக்கும் ஒரே வழி என தெரிவிக்கப்பட்டது."

வணிக வியல் பள்ளி

பரபரப்பு!!!

மேலும், கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன் (COA) தேர்வுக்கான கல்வித் தகுதியில், தட்டச்சு (தமிழ்/ஆங்கிலம்) இளநிலை தகுதி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பரபரப்பாக பேசப்பட்டது.


அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேல்  ஆதங்கம்!!!

 கடந்த நான்கு மாதங்களாக இந்த கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர்களும் அமைச்சர்களும் மனுக்களும் கொடுக்கப்பட்டும் முடிவில்லை என உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

"இவை அனைத்துக்கும் விரைவில் நல்ல முடிவு வரும்" என தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்  நாராயணன் நம்பிக்கை தெரிவித்தார். வருகை தந்த அனைவருக்கும் பொருளாளர் . கார்மேகம் நன்றியுரை வழங்கினார்.


மேலும் செய்திகளைத் தொடர...
தூத்துக்குடி லீக்ஸ் 🗞️


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக