Tamil Nadu updates
photo news by Arunan journalist
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் ஆய்வு
தூத்துக்குடி, ஆகஸ்ட் 1:
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியின் கீழ் இயங்கும் தூத்துக்குடி அண்ணா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
மாநகராட்சி சார்பில் டாக்டர் சரோஜா ஆய்வின் போது.. உடன் எஸ். ஒ ராஜே சேகர்பெண் பயணிகள் தங்கள் கைக்குழந்தைகளுக்கு அமைதியான சூழலில் பசிக்குத் தீர பாலூட்டும் வசதி, இந்த அறைகளில் சுத்தம் மற்றும் பாதுகாப்புடன் வழங்கப்படுகிறது.
குழந்தைகளை தாய் பாலூட்டும் இந்த அறைகள் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்று உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார நகர் அலுவலர் டாக்டர் சரோஜா நேரில் சென்று இந்த அறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "பாலூட்டும் தாய்மார்கள் அறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன. உட்காரும் வசதி, தனிமையான சூழல், பாதுகாப்பு போன்ற அம்சங்கள் சிறப்பாக உள்ளன" என தெரிவித்தார்.
அவருடன் ஆய்வில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் கலந்து கொண்டார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக