தூத்துக்குடி மாவட்டம் – 07.07.2025
ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 2,000 சிறுவர்கள் மீட்பு !!!
தமிழக ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
‘ஆபரேஷன் லிட்டில் ஏஞ்சல்ஸ்’ எனும் மத்திய ரெயில்வே வாரியத்தினால் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், தமிழகத்திலுள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 2 ஆயிரம் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்புப்படை (RPF) தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் 90-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில், தினமும் 16 லட்சம் பயணிகள் பயணம் செய்கிற சூழலில், பாதுகாப்புப் பணியில் 24 மணி நேரமும் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்புப்படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், போதைப்பொருட்கள், ரேஷன் அரிசி உள்ளிட்ட கடத்தல்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆதரவின்றி சுற்றித்திரியும் சிறுவர், மனநலக்குறைவுடன் பாதிக்கப்பட்டோர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் என பலரை 'கண்ணியம் காப்போம்' திட்டத்தின் கீழ் மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
‘ஆபரேஷன் லிட்டில் ஏஞ்சல்ஸ்’ திட்டத்தின் மூலம், பெற்றோருடன் சண்டையிட்டு வீடுகளை விட்டு வெளியேறிய குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பாழான நிலைமைக்கு தள்ளப்பட்ட சிறுவர்கள்/சிறுமிகள் ஆகியோர் ரெயில்வே பாதுகாப்பு படையினரால் கண்டறிந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
மீட்கப்படும் சிறுவர்கள், பெற்றோர் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்புடன் ஒப்படைக்கப்படுகின்றனர் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக