வியாழன், 26 ஜூன், 2025

ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்வாரா ? தமிழக பாஜக கண்டனம்

Tamil Nadu updates,26-7-2025

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை. 


மத்திய உள்துறை அமைச்சரை அநாகரீகமாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்ல வேண்டும்.


துணை பொது செயலாளர் ஆ.ராசா தமிழகத்தில் அமைதியை குலைக்கும் வகையில், தொடர்ந்து மதவாத,வகுப்புவாத பிரிவினைவாத கருத்துக்களை பேசி ஆபத்தான அரசியல் செய்து,சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விஷ விதைகளை விதைத்து வருகிறார்.



திமுக ஆட்சியின் அதிகார மமதையில்,இந்து கடவுள்களையும் இந்து மதத்தையும் கொச்சையாக பேசி வருகிறார். சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சர்ச்சைக்கிடமாக, திமுகவினர் திருநீறு உள்பட இந்துமத அடையாளங்களுடன் நடமாடக்கூடாது என்று மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில்பேசியிருந்தார்.

குழப்பத்தில் திமுக!!!

"திமுகவின் அமைச்சர் சேகர்பாபு  திடீரென்று சூடு, சொரணை உடன் ராசா பேசியது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்து அல்ல. முன்னாள் மத்திய அமைச்சர்  ராசாவின் தனிப்பட்ட கருத்து என்று பதில் சொல்லியிருந்தார்"


"ஆனால் ஆ ராசா அப்படி பேசியது , அவரின் தனிப்பட்ட கருத்தா? அல்லது திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின்  மனசாட்சியாக, வழிகாட்டுதல் படி பேசினாரா? என்பதற்கு  திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனும்  பதில் சொல்லவில்லை."


யார் முட்டாள்!!!

தற்போது மதுரை முருக பக்தர் மாநாட்டில் ஏற்பட்ட ஆன்மீக எழுச்சி காரணமாக தமிழக மக்களின் மனதில் தீய சக்தி திமுக வீழ்த்த வேண்டும் என்ற தமிழக மக்களின் விழிப்புணர்ச்சி வலுப்பெற கூடாது என்ற அடிப்படையில்....

அதை திசை திருப்புவதற்காக உலக  அரசியலில் ராஜதந்திரியாக பார்க்கப்படுபவரும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் வலிமைக்காகவும் பல முக்கிய மசோதாக்கள் பாராளுமன்றத்திலே இயற்றி, இந்திய தாய் திருநாட்டின் கலாச்சாரம் பண்பாடு, உள்நாட்டு பாதுகாப்பை பேணிப் பாதுகாக்கும் அற்புத அரசியல் தலைவராக, அரசியல் சார்பற்ற அனைத்து கட்சி  தலைவர்களாலும் பாராட்டப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  குறித்து மிகவும் தரம் தாழ்ந்து, மோசமான முறையில் "முட்டாள்" என்கிற வார்த்தையை ஆ ராசா பயன்படுத்தியுள்ளார்.

மெளனமான திமுக!!!

2 ஜி ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது மேல் முறையிட்டு விசாரணை குற்றவாளியான ஆ.ராசா.பேசியதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன்?

ஆட்சி பறிபோகும் பயத்தில் திமுக!!!

தமிழகத்தில் நடைபெறும் உலகின் மோசமான ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் என  அமித்ஷா  சபதம் செய்து, அதிமுகவையும் பாஜகவையும் இணைத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலிமைப்படுத்தி மக்கள் விரோத, தீய சக்தி, ஊழல் திமுகவை  வீழ்த்துவேன் என்று அறிவித்ததம் ஆட்சி பறிபோயிடுமோ என்ற பயம்  திமுகவினருக்கு ஏற்பட்டு விட்டது.


தமிழக பாஜக தலைவர் நயினார்  நாகேந்திரன் திரு எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் திமுக ஆட்சியை விரட்டி அடித்தது போல அமித்ஷா உருவாக்கிய வெற்றி கூட்டணியும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள்  என்பதால் முதலில் ஸ்டாலின் அவர்களுக்கு  பயமும் பதட்டமும் உருவாகியுள்ளது. 


இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவதூறு செய்யும் நோக்கில், திரை மறைவு அரசியலாக,  ஆ.ராசாவை வைத்து கேவலமான அரசியல் செய்கிறாரோ? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

கண்டிக்க வேண்டும்!!!

மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவரது நண்பர் தான் திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர் கூறியபடி, கடமை,கண்ணியம், கட்டுப்பாட்டை காக்கும் அரசியல்வாதியாக செயல்பட்டு தன்னுடைய அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக , திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டிக்க வேண்டும் சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும்.


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்களும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அரசியல் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.  


திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மக்கள் விரோத கூட்டணி எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மனசாட்சி இல்லாமல் நாகரிகமற்ற முறையில் அவதூறு பிரச்சாரங்களை  செய்தாலும்,

"எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளாக பார்க்காமல் பொறுப்புடன் நாகரீகமாக மனிதநேயத்துடன் பண்புடன் மக்கள் நலப் பிரச்சினைகளை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சித்து பதில் அளிக்கும் நைனா நாகேந்திரன் அவர்களிடம் நாகரிக அரசியலை ஆ.ராசா கற்றுக்கொள்ள வேண்டும்"


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக