வெள்ளி, 6 ஜூன், 2025

கடமைக்காக அல்ல, கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்!" - அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தல்

Tamil Nadu updates 

photo news by

sunmugasuthram press club president 

தூத்துக்குடி, ஜூன் 5:

கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் திமுக சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் தலைமையிலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது, தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 




பின்னர் உரையாற்றிய அமைச்சர் கீதா ஜீவன்,...
"1949-ல் திமுக உருவாக்கப்பட்டு அண்ணா வழிகாட்ட, அதன் பிறகு கலைஞர் தலைமையில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இன்று அவரின் பாதையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் முன்னோடியான மாநிலமாக மாற்றி வருகிறார்," என்று தெரிவித்தார்.

அதனுடன், “வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோர் விகிதம் 11.5% இலிருந்து தமிழ்நாட்டில் 1.4% ஆகக் குறைந்துள்ளது. இது தொழில் வளர்ச்சி, தனியார் வருமானம் ஆகியவற்றின் சாட்சியாகும்,” எனவும் கூறினார்.

மேலும்,

  • “மாநிலத்தில் 7வது முறையாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 2வது முறையாகவும் ஆட்சி அமைக்க, கடமைக்காக அல்ல, கடமை உணர்வோடு ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும்,” என்றார்.

நிகழ்வில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி  உள்ளிட்ட பலர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, பல்வேறு அணித் தலைவர்கள், நகர மற்றும் மாவட்டத் திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக