தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தீவிர பாலியல் புகார் – இருதரப்பு வழக்குகள் குறித்து போலீசார் விசாரணை
📍தூத்துக்குடி மாவட்டம் – 05.06.2025
தூத்துக்குடியில், இளம்பெண் ஒருவரால் அளிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் பணமிரட்டல் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மீது, அந்த இளம்பெண் தனது தந்தையை தாக்கியதாக கூறிய புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கடந்த 05.04.2025 அன்று Cr.No. 270/25, u/s. 296(b), 115(2), 351(2) BNS பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தவறான புகைப்படம் மற்றும் வீடியோ பரபரப்பு !!!
மேலும், அதில் குறிப்பிடப்பட்ட முதலாவது நபர், அதே இளம்பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் ரூ.10 லட்சத்திற்கும் மேலான தொகையை மிரட்டிக் பெற்று, புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் மேலும் தவறாக பயன்படுத்தியதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் Cr.No. 24/2025, u/s. 64, 76, 296(b), 308, 351(2) BNS மற்றும் 66(E) of IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
👮 காவல் துறை தீவிர விசாரணை!!
இந்த வழக்கில், கைப்பேசி சோதனை, பணப்பரிமாற்ற ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 14.05.2025 அன்று அதே நபரின் மீது, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில், Cr.No. 418/2025 u/s. 296(b) BNS மற்றும் Arms Act 25(1)(A) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறையில் உள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட முதலாவது நபரின் சகோதரி புகார்!!!
இதேபோல், குற்றச்சாட்டு பெற்ற நபரின் சகோதரி கடந்த 15.05.2025 அன்று அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் Cr.No. 159/25, u/s. 126, 296(b), 308(3), 351(3), 356(ii) BNS பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பிலும் புகார்!!!
இருதரப்பு புகார்களும் தற்போது விசாரணையின் கட்டத்தில் உள்ளன.
காவல்துறை அறிவுறுத்தல்கள்!!!
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து எந்தவொரு ஊடகமும் உண்மைத் தகவல்களை உறுதி செய்த பிறகு மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.png)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக