ஞாயிறு, 25 மே, 2025

வாழ்க்கை வரலாறு திமுக Ex எம்எல்ஏ பெரிசாமியின் 8ம் ஆண்டு நினைவு அஞ்சலி

 Tamil Nadu updates,26-5-2025

 Photo news by Arunan journalist 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி தொகுதி MLA வுமான சமுக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் -தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் இவர்களின் தந்தையும், கலைஞரின் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்டவருமான என்.பெரியசாமி சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2017 மே26  அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.



எட்டாம் ஆண்டில்...

17 வயதில் 78 வரை...!!!

 78 வயதான இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தனது 15 வயதில் தட்டார்மடத்தில் இருந்து...

 தூத்துக்குடி வந்து 17 வது வயதில் வார்டு உறுப்பினர் 19 வது வயதில் வட்ட பிரதிநிதி, என்று திமுகவில் நகர்ந்து ...1986ல் தூத்துக்குடி நகராட்சி சேர்மன் ஆகி, 1987ல் மாவட்ட செயலாளர் ஆகி கடைசி வரை அப்பதவியை தக்க வைத்துக் கொண்டவர்.


1989 to 1991 வரை 

MLA , 96 to 2001

 MLA , 97to 2001 மத்திய கூட்டுறவு சேர்மன் எனவும் துறைமுக சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 

தூத்துக்குடி யில் பஞ்சாலைகள் மதுரா கோட்ஸ் ஸ்பின்னிங் மில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உப்பு சுமை மூடை தூக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தன் பாடு மற்றும்  ரிக் ஷா ,ஆட்டோ தொழிற்சங்க உள்ளிட்ட 32 தொழிற்சங்கங்களுக்கு தலைவராக இருந்தார்.

அன்பான முரட்டு பக்தன்




 கடந்த 2017 வருடம் மே 26 அன்று என்.பெரியசாமி சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்கள். 

அன்றிரவு தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு  மறுநாள் ஞாயிறு காலை 10 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது 

இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின்...



திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக முக்கிய தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் தூத்துக்குடியில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் 

சாதனை!!!!

தூத்துக்குடி மாநகராட்சி ஆகவும், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி வரவும், ஆட்சியர் அலுவலக கட்டிடம் வரவும் முக்கிய காரணமானவர் தூத்துக்குடி வளர்ச்சிக்கு இவரது பங்கு முக்கியமானது என்றால் மிகையாகாது

தூத்துக்குடி போல் நாயக்கன் பேட்டையில் சமாதி !!!

 2025மே26 இன்று எட்டாம் ஆண்டில் தூத்துக்குடி போல் நாயக்கன் பேட்டையில் சமாதியான அவரது சொந்த இடத்தில் அமைந்திருக்கும் பெரியசாமி திருவுருவ சிலைக்கு ரோஜாக்கள் தூவி மலர் மாலை அணிவித்து திமுக நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இருப்பினும்..2018 மே 22ல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கி சூடு நிகழ்வுகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக முதல் வருடம்  நினைவு அஞ்சலி செலுத்தப்படவில்லை என அடுத்தடுத்து  கொரானா காலகட்டத்திலும் இயலாமல் போய்விட்டது .

புகைப்படங்கள் அனைத்தும் தூத்துக்குடி லீக்ஸ் பழைய கோப்பு காட்சி

திமுக ஆட்சியில் அமர்ந்த கடந்த 2021 காலகட்டத்தில் இருந்து  தொடர்ந்து மரியாதை செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி லீக்ஸ் க்காக

அருணன் செய்தியாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக