திங்கள், 26 மே, 2025

மக்கள் நலக் கோரிக்கைக்கு தடையாக காவல்துறை? தூத்துக்குடியில் தவெக கொதிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் 26-5-2025

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அத்திமரப்பட்டி பகுதியில் நீர் வடிகால் ஓடையை பராமரித்தும், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்தும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A.அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று( 26-5-2025) மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு வழங்கப்பட்டது.



காவல் துறை அனுமதி மறுப்பு!!!

இந்நிகழ்விற்கு முன், அமைதியான முறையில் மனு அளிக்கத் தயாரான பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கு, ஆளும் அரசின் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக கடும் எதிர்வினையை கிளப்பியுள்ளது.




“எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், தமிழக வெற்றித் கழகம் தலைவர் தளபதியார் விஜய்  காட்டிய வழியில், மக்கள் பணியில் மக்களோடு மக்களாய், மக்களுக்காக செயல்படுவோம்,” என தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்  அஜிதா ஆக்னல் உறுதிபடத் தெரிவித்தார்.


இந்த செயல்பாடு, தூத்துக்குடியில் மக்கள் நலமே முன்னிலை என்ற கருத்தை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக