சனி, 3 மே, 2025

ஒட்டப்பிடாரம் முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் அன்னதான தொடக்க விழா தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

Tamil Nadu updates 3-5-2025


முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் அன்னதான தொடக்க விழா
தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி | மே 3:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்த கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

 இவ்விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.



இந்நிகழ்வை தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல்  இன்று பக்திப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 



பின்னர், அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கழகத்தினர் மற்றும் உள்ளூர் தொண்டர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆன்மிக திருப்தியோடு அன்னதானம் பெற்றனர். விழா ஒருங்கிணைப்பில் கழகத் தோழர்கள் முக்கிய பங்காற்றினர்.

பக்தர்களின் வசதிக்காக சுத்தம், நீர் விநியோகம், நிழல் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் நன்க செய்யப்பட்டிருந்தன. 

விழா நாட்களில் மேலும் பல ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக