திங்கள், 26 மே, 2025

1.6.2025 முதல் 17.7.2025 வரை (48 நாட்கள்தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு பிரசார பயணம்

தாய்க்களம் வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பு சார்பில்...


தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு பிரசார பயணம்

திகதி: 1.6.2025 முதல் 17.7.2025 வரை (48 நாட்கள்)
இடம்: தமிழகம் முழுவதும் – 234 சட்டமன்ற தொகுதிகள்
தலைமை: லெமுரியா செல்வம், ஆனந்தியம்மாள்
ஒருங்கிணைப்பு: பொ. செல்லபாண்டியன், க.பா.பி. விஜய பாஸ்கரன், லெமுரியா ராஜா, அவனி மாடசாமி
ஆய்வு, ஒலி-ஒளி பிரசாரம், நோட்டீஸ், வால்போஸ்டர் அடங்கிய பிரச்சாரம்

தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் பிரசார பயணம்.



தாய்க்களம் வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பு அமைப்பின் சார்பாக 1.6.2025 முதல் 17.7.2025 வரை (48 நாட்கள்) தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு பிரசார பயணம் 


 "லெமுரியா செல்வம், ஆனந்தியம்மாள் தலைமையில், . பொ. செல்லபாண்டியன், க.பா.பி. விஜய பாஸ்கரன், லெமுரியா ராஜா, அவனி மாடசாமி ஆகியோரின் ஒருங்கிணைப்போடு தமிழ் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசார வாகனம் தமிழ்நாடு முழுவதும் (ஒலி, ஒளி) பிரசாரமும், துண்டு அறிக்கை நோட்டீஸ்களும், வால்போஸ்ட்களும் பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள்"


பிரச்சார பயணத்தில் தமிழ்வழி கல்விகொடுக்கும் பள்ளிகளை வளர்ப்போம்! என 234 தொகுதிகளிலும்....


அந்த அந்த மாவட்டங்களில்

தமிழ் நாட்டில் தமிழ்வாழ!

 தமிழர் வாழ! தமிழா தமிழில் பேசு! 

தமிழா தமிழில் எழுது! 

தமிழா தமிழில் பெயர் சூட்டு!

 தமிழா தமிழில் கையொப்பமிடு! 

தமிழா தமிழில் 

பெயர் பலகை வை:

 தமிழா தமிழில் கை பேசி. கணிப்பொறிகளை பயன்படுத்து! 


தமிழா தமிழின வீரக்கலைகளை கற்றுக்கொள்! 


தமிழை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க குரல்கொடு! 

தமிழ்வழி கல்விகொடுக்கும் பள்ளிகளை வளர்ப்போம்!

 தமிழை அறிந்தவன் தன்னை அறிவான். 


தன்னை அறிந்தவன் தலைவரை அறிவான் தமிழை முதன்மைப் படுத்துவோம்

 அடையாள அட்டை, விளம்பரப் பலகை போன்றவற்றில் தமிழை முதன்மையாகபயன்படுத்த முன்வருவோம். 


ஆங்கிலத்தை பயன்படுத்துங்கள் தமிழை முதன்மை படுத்துங்கள். 


தமிழ் பாரம்பரிய உணவுகளை எதிர்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோம்.


 உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் இன்று மருந்தே உணவு என்னும் நிலையாகிவிட்டது. 


நாகரீக நச்சு உணவுகளை தவிர்த்து சிறுதானிய உணவுகளையும், தமிழர் உற்பத்தி காய்கறிகளையும் உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நமது இளைய தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுப்போம். 


பனை மர உற்பத்தி பொருட்களை மயன்படுத்துவதன் மூலமாக பனைத் தொழிலை வளமை அடையச் செய்வோம். பாரம்பரிய விளையாட்டுகளை வளர்த்தெடுப்போம். இன்று அலைபேசியில் விளையாடுவது அல்ல விளையாட்டு அன்று கிராமங்களில் விளையாடியதே விளையாட்டு, விளையாட்டு மூலமாக கணிதம் படித்து அறிவியல் பயின்று, கண்ணுக்கும் காலுக்கும் என தனித்தனி உடல் நலப் பயிற்சிகளை வழங்கிய கிராமிய விளையாட்டுகள் இன்று காண முடியவில்லை. 


அந்நிய விளையாட்டுக்கும் அலைபேசி விளையாட்டுக்கும் அடிமையாகிப் போன நம் தலைமுறைக்கு சுபடியின் அருமையையும் கண்ணாமூச்சியின் பெருமையையும் எடுத்துரைக்க கடமைப் பட்டுள்ளோம். தமிழ்க் கலைகளை பாதுகாப்போம். தமிழர் வாழ்வோடு ஒன்றிப்போன தமிழக பாரம்பரியக் கலைகளை பாதுகாக்கும் பொருப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.


 தாலாட்டு, தொழில் மாடல், ஒப்பாரி என தமிழ் பண்பாட்டின் ஒவ்வொரு அசைவையும் கலை வழியாக கட்டிக் காத்த தமிழ் பாரம்பரியக் கலைகள் அனைத்தையும் பேணிக் காக்கப்பட வேண்டும்.


 இயற்கையை நேசிப்போம்: நம் தமிழ்ச் சமூக மூத்தோர்கள் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பகுத்து அதன் வளமைகளைபோற்றிக் காத்தனர். ஆனால் இன்று நிலங்கள் விஞ்ஞான வளர்ச்சி எனும் பெயரில் சீரழிக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் நேசித்த இயற்கையை அழியாமல் பாதுகாப்போம். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிறந்த நாளை மரம் நடுநாளாக கொண்டாடுவோம். ஏரிகளையும் குளம் குட்டை கண்மாய்களையும் பாதுகாத்து அடுத்து தலைமுறைக்கு இயற்கையான சூழலை பரிசாக வழங்குவோம். இயற்கை மருத்துவத்தை ஊக்கப்படுத்துவோம்: 


பக்க விளைவு இல்லாத பாட்டி வைத்தியத்தை மறந்த நாள் முதல் நோய்க்கு ஒரு மருந்து மருந்தினால் ஒரு நோய் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


நாம் மறந்து போன தமிழ் மருந்துகளையும், சித்த வைத்தியத்தையும் மீண்டும் நினைவு கூருவோம் பயன்படுத்துவோம் பாதுகாப்போம். தமிழ் கலாச்சார உடைகளை அணிந்து கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவோம். தாளம் செய்வதே தமிழர் பண்பாடு: விருந்தோம்பலையும் தான தர்மங்களின் சிறப்புகளையும் உலகிற்கே எடுத்துரைத்த தமிழ் மரபைச் சேர்ந்த நாம் ஒவ்வொருவரும் வாழும் போது இரத்த தானத்தையும், வாழ்விற்கு பின் கண் மற்றும் உடல் தானத்தையும் செய்ய முன்வரவேண்டும் தமிழர் வாணிபம் சிறக்கச் செய்வோம்: தமிழ்களின் பாரம்பரியத் தொழில்களும், வாழ்வாதாரமும் செழித்தோங்க தமிழர்களின் சிறு குறு தொழில்களை ஊக்கப்படுத்துவோம். பெண்மையை போற்றும் தாய்மையை வணங்கி பணியும் தனி மனித ஒழுக்கத்தையும் நம் இளையோருக்கு கற்றுக் கொடுப்போம். அமிழ்தான தமிழை அகத்தில் நினைப்போம், உயிரான தமிழை உள்ளத்தில் கொள்வோம் 'தமிழ் எங்கள் உயிர்" என்ற உணர்வோடு வாழ்வோம். உயிர் இன்றேல் உடல் இல்லை தமிழ் இல்லையென்றால் நாம் இல்லை! எத்தனையோ இலக்கியங்களை ஈன்றெடுத்த நம் முத்தனைய உயிர்தனிச் செம்மொழியாம். தமிழ்மொழியை நாம் நெஞ்சாரப் போற்றுவோம்.


|தமிழ் மொழியையும், தமிழர் வாழ்வையும் செழித்தோங்கச் செய்யும் எங்கள் முயற்சியில் நீங்களும் ஓர் அங்கமே இப்பயணம் வெற்றி பெற நீங்களும் எங்களோடு கை கோருங்கள் வாழ்க தமிழ்... வளர்க வையகம்..."என்ற பரப்புரை செய்ய இருக்கிறோம் என்றார்கள்





 செய்தி:

"தமிழ் எங்கள் உயிர்" என்ற உணர்வோடு தமிழையும், தமிழரையும் செழிக்கச் செய்வதே இப்பயணத்தின் நோக்கம். அனைத்து தமிழர்களும் இதில் பங்கேற்று தமிழின் வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம்."


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக