தூத்துக்குடி | 03 மே 2025
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப முன்னெடுத்துள்ள #FitnessChallenge ஒரு பகுதியாக, நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான இரண்டாம் கட்ட முழு உடல் பரிசோதனை இன்று (03.05.2025) நடைபெற்றது.
தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த பரிசோதனை முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப முன்னிலை வகித்தார்.
இந்த முகாமை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் ரகு, மற்றும். பாரத் பெகெரா, மற்றும் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான குழு முன்னெடுத்தது.
மூப்பெரும் மருத்துவர்களால், 40-க்கும் மேற்பட்ட நேரடி சார்பு ஆய்வாளர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, கொழுப்புச் சதவீதம், உயரம் மற்றும் எடை போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவையனைத்தும் கடந்த 29.03.2025 அன்று நடைபெற்ற முதல் கட்ட பரிசோதனைக்கு தொடர்ச்சியாக நடைபெற்றதாகவும், அனைத்து அதிகாரிகளும் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்காக உறுதிமொழியுடன் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் ஆகியோரும் பரிசோதனையில் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக