Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
# தூத்துக்குடியில் முறைகேடு: காலாவதியான அனுமதியுடன் இயங்கும் TNSTC ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி
தூத்துக்குடி | ஏப்ரல் 17, 2025
தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (TNSTC திருநெல்வேலி) கீழ் இயங்கும் தூத்துக்குடி மண்டல ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இப்பயிற்சிப் பள்ளியின் செயல்பாட்டு அனுமதி காலாவதியாகியும், புதுப்பிக்கப்படாமலேயே தொடர்ந்து இயங்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பல மாதங்களாக முறையான புதுப்பித்தல் இல்லாமல் இயங்கி வரும் இந்த பயிற்சிப் பள்ளியில் நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"அனுமதி காலாவதியான நிலையில் பயிற்சிப் பள்ளியை இயக்குவது சட்டவிரோதமானது. இதனால் பயிற்சி பெறுபவர்களின் சான்றிதழ்களின் செல்லுபடித்தன்மையும் கேள்விக்குறியாகிறது," என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக