வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவநாள் உறுதிமொழி நிகழ்வு சாதி பார்க்க மாட்டேன் - மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி

Tamil Nadu updates,

Photo news by sunmugasuthram Reporter 

# தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவநாள் உறுதிமொழி நிகழ்வு

சாதி பார்க்க மாட்டேன் - மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி, ஏப்ரல் 11: தூத்துக்குடி மாநகராட்சியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவநாள் உறுதிமொழி நிகழ்வு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.


வரும் ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடப்படும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சமத்துவநாள் உறுதிமொழி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னின்று, "ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய....


 நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுத்துதந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில் ஜாதி வேறுபாடுகள் எதுவும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்" என்றும், "சக மனிதர்களைச் ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன்" என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். 


இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி பொறியாளர் சரவணன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், வட்டச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக