Tamil Nadu updates,4-4-2025
Photo news by Arunan journalist
# தூத்துக்குடியில் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, ஏப்ரல் 4: இஸ்லாமிய சொத்துக்களின் மீதான உரிமைகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![]() |
அஜிதா ஆர்கனல் தலைமையில்... |
தூத்துக்குடி 12-வது வாசல் எதிர்புறம் உள்ள மைதானத்தில் காலை 10 மணி முதல் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்...திரளான இஸ்லாமிய சமூகத்தினர் கலந்து கொண்டு மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ...
தமிழக வெற்றி கழகம் தூத்துக்குடி மாநகர எஸ்டிஆர் சாமுவேல் ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
![]() |
சாமுவேல் ராஜ் தலைமையில்... |
போராட்டக்காரர்கள், இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்கள் மீதான உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
குழப்பம் அடைந்த தூத்துக்குடி தவெக தொண்டர்கள்
தூத்துக்குடி 12 வது வாசல் மையவாடி எதிர்ப்புறம் ஒரே இடத்தில் ..
அடுத்து அடுத்து 9 டூ 10 மணி ஆர்ப்பாட்டம் முடிந்து போனதும் பின்னர் 11 டூ 12 மணி என தனித்தனியாக தவெக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால்... தூத்துக்குடி தமிழக வெற்றி கழகம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதேபோல்..அடுத்து முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 12 டூ 1 மணி வரை நடைபெற்றது
![]() |
முருகன் தலைமையில்... |
இதனால்?
தூத்துக்குடி காவல்துறை யும் குழப்பம் அடைந்து காத்து கிடந்தார் கள்??!
_(தூத்துக்குடி லீக்ஸ் செய்தி - 04.04.2025)_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக