புதன், 2 ஏப்ரல், 2025

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய தகவல் சேகரிப்பு: எச்சரிக்கை விடுக்கப்படுகிறது

Tamil Nadu updates,3-4-2025

தூத்துக்குடி, ஏப்ரல் 3, 2025


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மூன்று பெண்கள், பேருந்து  பயணிகளிடம் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



தூத்துக்குடி மாநகராட்சி அங்கி அணிந்த இந்த பெண்கள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடம் பெயர் மற்றும் செல்போன் எண்களை வெள்ளைத் தாளில் குறித்துக் கொண்டிருந்தனர். இது குறித்து விசாரித்த பொதுமக்களிடம், "குப்பை வண்டி சர்வே எடுக்கிறோம்" என்று கூறியதாக சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.



மேலும் "குப்பைகள் சரியாக எடுக்கப்படுகின்றனவா" என்று கேள்வி எழுப்பியபோது, அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ???


அவர்கள் "ஒரு ஆஃப் இருக்கிறது, அதற்காக வேண்டும்" என்று தெளிவற்ற பதிலளித்து, உடனடியாக அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர்.


குறிப்பாக கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சில பயணிகள் தங்கள் செல்போன் எண்களை வழங்கிய பின்னர், அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் OTP (ஒரு முறை கடவுச்சொல்) எண்களை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தூத்துக்குடி மாநகராட்சி இது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டுள்ளதா??? 

நாளிதழ் செய்தி ஊடகங்களில் இந்த தகவல் வரவில்லை 

. இது மோசடி முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை, குறிப்பாக செல்போன் எண்கள் மற்றும் OTP எண்கள அறியாத நபர்களிடம் பகிர்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



 இது போன்ற மோசடி முயற்சிகள் மூலம் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக