Tamil Nadu updates
Photo news by Arunan journalist
# தூத்துக்குடி: “வாங்க போகலாம் Men’s Wear” சேவை பொதுமக்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு
தூத்துக்குடி, ஏப்ரல் 23, 2025
தூத்துக்குடி மாநகரின் பரபரப்பான ஒன்றாம் ரயில்வே கேட் அருகில் உள்ள காசி கடை பஜாரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள “வாங்க போகலாம் Men’s Wear”
என்ற இம்போர்ட் ஆடைக் கடை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"இந்த கடையில், உலகம் முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாடல் இம்போர்ட் துணிகள் கிடைக்கும். நவீன டிரெஸ்களில் ஆர்வமுள்ள இளையோரையும், ஸ்டைலிஷ் ஆடை அணிய விரும்பும் மூத்தோரையும் இவ்விடம் பெரும் ஈர்ப்பு கவர்கிறது."
இந்த புதிய மாடல் ஆண்களுக்கான “வாங்க போகலாம் Men’s Wear” கடை தூத்துக்குடி மட்டுமல்லாது சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
கோடைக்காலம் முன்னிட்டு தினம் பொதுமக்களுக்கு இலவசமாக ஜிகிர்தண்டா வழங்கல்
இன்று (ஏப்ரல் 23) காலை கோடைகால வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கடை நிர்வாகம் பொதுமக்களுக்காக இலவச இனிப்பு உயர் தரமிக்க ஜிகர்தண்டா வழங்கியது.
வெயிலில் தவிக்கும் பொதுமக்களுக்கு ஏராளமானோர் இன்று ஜிகிர்தண்டா பருகி சென்றனர்
கடையின் உரிமையாளர் தெரிவித்ததாவது, ...
"தினமும் ஒவ்வொரு வகையான நீர் பானத்தை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். வியாபாரத்தோடு சேர்த்து சமூக சேவையும் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.
மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன ஆடைகள் நியாயமான விலையில் கிடைப்பதால், இளைஞர்கள் மத்தியில் இக்கடை பெரும் பிரபலத்தை பெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இது போன்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படும் வணிக நிறுவனங்கள் பாராட்டுக்குரியவை என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக