திங்கள், 14 ஏப்ரல், 2025

அம்பேத்கார் 135வது பிறந்த நாள் விழா: மலர்மாலை அணிவித்து மரியாதை

 தூத்துக்குடி லீக்ஸ் - செய்தி

அம்பேத்கார் 135வது பிறந்த நாள் விழா: மலர்மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி: அண்ணல் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் திருவுரு சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையிலான நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்காருக்கு மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சங்கரன், பொருளாளர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் கணபதி, துணைச் செயலாளர் நீலமேகம், அமைப்புச் செயலாளர் முருகன், மாவட்ட மகளிரணி தலைவி விஜயராணி, செயலாளர் சுகாராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அருந்ததியர் சமுதாயத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக